கோவை, நவம்பர் 8: "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை" என்று மேலவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி குற்றம் சாட்டினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நடந்த கோவை ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருப்பு பணமாக இருக்கும் 5 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் புழக்கத்திற்கு வராது என சொன்னார்கள்.
ஆனால் 99 சதவீதம் பணம் திரும்பி வந்து விட்டது. ஒரு சதவீதம் மட்டுமே கருப்பு பணம் முடங்கி இருக்கின்றது.
கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கின்றது, தீவிரவாதம் முடங்க வில்லை என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை.
பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் மீண்டு வரவில்லை. ஒராண்டுக்கு பின்னரும் அதே நிலை நீடிக்கின்றது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகரித்து இருந்த டிஜிட்டல் பரிவர்த்தணை தற்போது மீண்டும் குறைந்து இருக்கிறது.
கலைஞரை பிரதமர் மோடி சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் 2ஜி தீர்ப்பிற்கு குறித்து பேசி கொச்சைப்படுத்த வேண்டாம் திமுக தலைவரை பார்க்கவே பிரதமர் மோடி வீட்டிற்கு வந்தார் என்றும் தெரிவித்தார்.